News June 24, 2024
சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததைக் கண்டித்து, சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இது குறித்து பேட்டி அளித்துள்ள ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தன்னை பேச அனுமதிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், சமூக நீதி குறித்து கேள்வி எழுப்பினால், பாஜகவுடனான கூட்டணி குறித்து பதிலளிப்பதாகவும், திமுக அரசை அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
பேரழகான டாப் 5 இந்திய ரயில் நிலையங்கள்

‘அழகு’ என்பது மனிதரில் மட்டுமல்ல, நாம் காணும் அனைத்திலும் உள்ளது. அதிலும் பயணம் என்பது அனுபவம் கலந்த அழகு. குறிப்பாக, ரயில் பயணம், நமது மனதை அதிகமாகவே அழகாக்கிறது. அந்த வகையில், ரயில் நிலையங்களும் அழகாக இருந்தால் பயணம் பேரழகாகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள டாப் 5 அழகான ரயில் நிலையங்களை மேலே Swipe செய்து பாருங்கள். அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றும் கவிதையை கமெண்ட்டில் எழுதுங்கள்.
News September 14, 2025
பசுவை விலங்காக கூட கருதுவதில்லை: மோடி

நாட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் பசுவை விலங்காக கூட கருதுவதில்லை என PM மோடி கூறியுள்ளார். இதனை, விலங்குகள் மீதான ஆர்வலர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கறை என்றும் PM குறிப்பிட்டார். நாடு முழுவதும் தெருநாய்கள் விவகாரம் விவாதமாகியுள்ள நிலையில், மோடியின் இந்த பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
News September 14, 2025
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும்.
★சாமந்திப்பூ இதழ்களைப் பிரித்து நன்கு காய வைக்கவும்.
★1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும்.
★8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
★அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE IT.