News December 25, 2024
கோவிட்-19ஐ விட கொடூர வைரஸ்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள அரசு ஆய்வகத்திலிருந்து ஹான்டா என்ற ஆபத்தான வைரஸ் மாதிரிகள் காணாமல் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் CDC கூற்றுப்படி, ஹான்டா வைரஸ் கடுமையான நோய் & மரணத்திற்கு கூட வழிவகுக்கும். சில வல்லுநர்கள் இது சீனாவின் வுஹானில் இருந்து பரவிய கோவிட்-19 ஐ விட அதிக இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.
Similar News
News July 8, 2025
கழிவுகளை நீக்கும் லெமன் டீ

*எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட நுண்சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி மனம் புத்துணர்வு பெறவும் மனஅழுத்தம் நீங்கவும் உதவுகிறது *வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும்.
News July 8, 2025
கில்லிடமிருந்து இங்கி., வீரர் கற்க வேண்டும்: வாகன்

தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி, இங்கி., அணிக்காக விளையாடுவதே ’அதிர்ஷ்டம்’ என விமர்சித்துள்ளார் மைக்கல் வாகன். 56 போட்டிகளில் 31 தான் கிராவ்லியின் சராசரி, சுப்மன் கில் இத்தொடருக்கு வரும்போது 35 என்ற சராசரியில் இருந்தார், தற்போது 42-ஆக உயர்ந்துள்ளது. முதலில் தற்காப்பில் கவனம் செலுத்தி, பின்னர் மோசமான பந்துகளை தாக்கினார். இதனை கிராவ்லி கில்லிடமிருந்து கற்க வேண்டுமென்றார்.
News July 8, 2025
திருப்புவனம் போல் மற்றுமொரு தாக்குதல் நடத்திய போலீஸ்

திருப்புவனம் அஜித் மீது போலீஸ் தாக்குதல் சம்பவம் இன்னும் தணியாத நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கோவில் இடத்தில் வீடு கட்டுவதற்கு பொன்ராஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். இதனை தங்கபாண்டி என்பவர் எதிர்த்துள்ளார். விவகாரம் காவல் நிலையம் சென்றதால், வேடசந்தூர் போலீசார் தங்கப்பாண்டி வீட்டிற்கே சென்று அவருடைய மனைவி, மகனை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.