News April 21, 2025

JEE மெயின்ஸ் தேர்வில் அசத்திய கிராமம்… 40 பேர் தேர்ச்சி

image

JEE முதன்மைத் தேர்வில் பிஹாரை சேர்ந்த கிராமம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பட்வ டோலி என்ற கிராமத்தில், இலவச பயிற்சி அளிக்கும் ‘விருக்ஷா சன்ஸ்தான்’ நிறுவனத்தில் பயிற்சிபெற்ற 28 பேர் உள்பட 40 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பொறியாளர் இருக்கின்றார். இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மற்ற கிராமங்களுக்கும் கிடைத்தால் நாட்டுக்கே மாற்றம் கிடைக்கும்.

Similar News

News December 22, 2025

ஸ்மிருதி மந்தனா வரலாற்று சாதனை

image

டி20-ல் 4,000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி20-ல் 19 ரன்கள் அடித்த போது அவர் இச்சாதனையை படைத்தார். குறைந்த பந்துகளில் 4,000 ரன்களை அடித்த வீராங்கனை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதிக ரன்கள் பட்டியலில் NZ-ன் சூஸி பேட்ஸ் முதலிடத்திலும், ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்திலும், ஹர்மன்பிரீத் கவுர் 3-வது இடத்திலும் உள்ளனர்.

News December 22, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 22, மார்கழி 7 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News December 22, 2025

பாஜக கண்டுபிடித்த புதிய மொழி: ப.சிதம்பரம்

image

ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதி, பாஜக அரசு புதிய மொழி ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது ஹிந்தியும் அல்ல, ஆங்கிலமும் அல்ல; இந்தி மட்டும் தெரிந்தவர்கள் இதைப் படிக்க முடியாது, ஆங்கிலம் தெரிந்தவர்கள் படிக்க முடியும் ஆனால் பொருள் புரியாது ; இரு மொழிகளையும் சிதைப்பது தான் பா ஜ க அரசின் மொழிக் கொள்கையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!