News May 11, 2024

போராடிய வீராங்கனைகளுக்கு கிடைத்த வெற்றி

image

WFI முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வரவேற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர்,”வெயில், மழை என பாராமல் போராடிய மல்யுத்த வீராங்கனைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. நீதிமன்றத் தீர்ப்பு ஆறுதலாக அமைந்துள்ளது. வீராங்கனைகளை கேலி செய்தவர்கள் தற்போது வெட்கப்படட்டும்” என்றார்.

Similar News

News November 18, 2025

இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

image

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றதற்கு காரணம் இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதுதான் என கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் வீரர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காததால், அவர்கள் அனைவரும் பயத்திலேயே விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அணியை சரியாக வழிநடத்தவில்லை என சாடிய அவர், ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் வேட்டை.. 31 பேர் கைது!

image

அண்டை மாநிலமான ஆந்திராவின் காக்கிநாடா, விஜயவாடாவில் 31 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்ட்டுகளின் முக்கிய தளபதி உள்ளிட்ட <<18318822>>6 பேர் என்கவுண்டர்<<>> செய்யப்பட்டனர். மேலும், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!