News May 10, 2024
அநீதிக்கு எதிராக கிடைத்த வெற்றி

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் அளித்திருப்பதை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அநீதிக்கு எதிராக கிடைத்த இந்த வெற்றி, நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியா கூட்டமைப்பையும் பலப்படுத்துகிறது, இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வேகத்தை அதிகரிக்கிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 22, 2025
TN அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் தெலங்கானா CM

TN அரசு நடத்தும் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலங்கான CM ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளார். நான் முதல்வன் திட்டம் உள்பட அரசின் 7 முக்கிய திட்டங்கள் தொடர்பாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.25-ம் தேதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. முன்னதாக, ஆகஸ்டில் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பஞ்சாப் CM பகவந்த் மான் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 22, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், செப்.25-ல் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், செப்.26, 27-ல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
News September 22, 2025
சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள்!

முதல் உலகப்போரில், சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள் இன்று. செப்டம்பர் 22, 1914-ல் ஜெர்மனியின் ‘எம்டன்’ கப்பல், சென்னை துறைமுகத்தின் மீது 130 குண்டுகளை வீசியது. இதில், எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. ஐகோர்ட் சுற்றுச்சுவரும் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், தாக்குதல் நடத்தியது செண்பகராமன் என்ற இந்திய பொறியாளர்தான்.