News March 29, 2025
அதிமுகவுக்கு தவெக மாற்று?

2026 தேர்தலில் DMK- TVK இடையேதான் போட்டி என்று விஜய் பேசியிருக்கிறார். அதாவது அதிமுகவுக்கு தவெக மாற்று என்ற பொருளில் பேசியுள்ளார். இதுவரை ஒரு தேர்தலில் கூட நிற்காத விஜய், தனது கட்சியின் வாக்கு சதவீதத்தை நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கையில், கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவுக்கு மாற்று என எந்த அடிப்படையில் அவர் பேசுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Similar News
News January 26, 2026
ராசி பலன்கள் (26.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 26, 2026
நீங்கள் இறந்தது போன்ற கனவு வருகிறதா?

நீங்கள் உயிரிழப்பது போன்று எப்போதாவது கனவு வந்ததுண்டா? இப்படிப்பட்ட கனவுகளால் நாம் நிஜமாகவே இறந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப் போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப்போகிறோம் என்பதுதான் இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இதுபோன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம்.. மாற்றம் ஒன்றே மாறாதது.
News January 26, 2026
BREAKING: கட்சியில் இணைந்ததும் முக்கிய பதவி

தனக்கு எந்த பொறுப்பும் வழங்காததால் அதிருப்தியடைந்த நடிகர் தாடி பாலாஜி, சமீபத்தில் தவெகவில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார். இந்நிலையில், அவருக்கு பரப்புரை பொதுச்செயலாளர் என்ற மிகப்பெரிய பதவியை அக்கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கியிருக்கிறார். அதாவது தவெகவில் ஆதவ் அர்ஜுனா பதவிக்கு இணையான பதவி தாடி பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.


