News August 25, 2025
விஜய் மீது மிக அசிங்கமான தாக்குதல்.. கேட்கவே காது கூசுது

ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் கூறியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை நடிகைகளுடன் இணைத்து பேசி, திமுக MLA கே.பி.சங்கர் அநாகரிகமாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு த்ரிஷா கூட போலாமா, கீர்த்தி சுரேஷ் கூட போலாமா என்றுதான் தெரியும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது; ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால், துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று மோசமாக பேசியுள்ளார்.
Similar News
News August 25, 2025
ஏற்றத்தில் முடிந்த சந்தைகள்.. லாபம் கண்ட பங்குகள்?

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 81,635 புள்ளிகளாகவும், நிஃப்டி 97 புள்ளிகள் உயர்ந்து 24,967 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. Infosys, TCS, HCL Tech, Wipro, Hindalco உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் பார்த்துள்ளனர். நீங்கள் வாங்கிய SHARE லாபம் தந்ததா?
News August 25, 2025
இதுக்கு சரியா பதில் சொல்லுங்க பார்ப்போம்!

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. இவற்றில் Blue, yellow, green பலூன்கள் எவ்வளவு என சரியாக கமெண்ட் பண்ணுங்க. பார்க்க கஷ்டமாக இருந்தாலும், ரொம்ப ஈசி. கொஞ்சம் பொறுமையா யோசிச்சி பாருங்க. எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்கனு பார்ப்போம்!
News August 25, 2025
பிரதமர் மோடி வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

PM மோடியின் டிகிரி தொடர்பான தகவலை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின்(CIC) உத்தரவை, டெல்லி ஐகோர்ட் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லி யுனிவர்சிட்டியில் 1978-ல் டிகிரி பெற்ற மோடி உள்பட அனைவரது விவரங்களை நீரஜ் என்பவர் CIC-யிடம் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அந்த தகவலை வழங்குமாறு யுனிவர்சிட்டிக்கு CIC கூறியிருந்தது. மோடியின் டிகிரி போலியானது என காங்., சாடியது கவனிக்கத்தக்கது.