News March 18, 2024
சற்றுநேரத்தில் அரசியலை புரட்டிப்போடும் தீர்ப்பு

ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் ஓபிஎஸ் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்து, சாமி கும்பிட்டார்.
Similar News
News October 20, 2025
தீபாவளி விடுமுறை.. புதன் கிழமையும் வந்தது அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஊர் திரும்ப ஏதுவாக புதன்கிழமையும் (அக்.22) சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்லையிலிருந்து இரவு 11:55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், சென்னைக்கு அடுத்த நாள் காலை 10:55 மணிக்கு வந்துசேரும். மறுமார்க்கத்தில் அக்.23 பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12:05 மணிக்கு நெல்லை சென்றடையும்.
News October 20, 2025
முதல்முறை முதலீட்டாளர்களே.. முகூர்த்த நேரம் குறிச்சாச்சு

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். இதன்படி, நாளை மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில், பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். அதேநேரம், அக்.22 பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை ஓபன் ஆகும்.
News October 20, 2025
FLASH: இந்தாண்டு ₹7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு ₹1,000 கோடி கூடுதலாக, அதாவது ₹7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தீபாவளி சிவகாசி மக்களுக்கு உண்மையிலேயே சரவெடிதான்..