News October 24, 2024
தினம் ஒரு திருக்குறள் (2)

இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
* விளக்க உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
SHARE IT.
Similar News
News December 1, 2025
சற்றுமுன்: விலை கிடுகிடுவென உயர்வு

டிட்வா புயல் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக ஒரு கிலோ கத்தரிக்காய் ₹140, தக்காளி ₹80, வெங்காயம் ₹75, வெண்டைக்காய் ₹80, ஊட்டி கேரட் ₹60 என விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
News December 1, 2025
பாக்., ட்ரோன் தாக்குதல் அதிகரிப்பு: BSF

ஆபரேஷன் சிந்துாருக்கு பிறகு, பாக்.,-ல் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் வீசும் போக்கு அதிகரித்துள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 2025-ல் எல்லையை கடந்து வந்த ட்ரோன்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பல்வேறு ரக துப்பாக்கிகள், 3,625 தோட்டாக்கள், 10 கிலோ வெடிபொருட்கள், 12 கையெறி குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக BSF தெரிவித்துள்ளது. 272 பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
News December 1, 2025
இன்று சமந்தாவுக்கு 2-வது திருமணமா?

நடிகை சமந்தாவுக்கு இன்று 2-வது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் ராஜ் நிடிமொருவை அவர் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ராஜின் மனைவி, ‘Desperate people does desperate things’ என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


