News October 23, 2024
பரங்கிப்பேட்டை அருகே லாரி மோதி விபத்து

சீர்காழி எலந்தூரை சேர்ந்த முகிலன் 33 என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி வினோதா நண்பர்கள் விஜயபாஸ்கர், பரத் கிஷோர் ஆகியோருடன் காரில் சென்னையிலிருந்து சீர்காழி சென்றபோது, பரங்கிப்பேட்டை அருகே பெரிய குமட்டி கிலியாளம்மன் கோயில் எதிரே இன்று காலை அதே வழியில் மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்னால் மோதியதில் முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேரும் உயிர் தப்பினர்.
Similar News
News December 8, 2025
கடலூர்: இலவச பிளம்பர் பயிற்சி அறிவிப்பு

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் பிளம்பிங் மற்றும் சானிட்டரி பணிகள் பயிற்சி (இலவச குழாய்கள் பொருத்துதல் பயிற்சி) வருகின்ற டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 8, 2025
கடலூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 8, 2025
கடலூர்: 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; சிறுவன் கைது

விருத்தாசலத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் AWPS போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது பிளஸ்-2 மாணவனை கைது செய்து, கடலூர் சீர்திருத்தப் பள்ளியில் நேற்று அடைத்தனர்.


