News May 10, 2024
விஜயகாந்தை விரும்பிய உள்ளங்களுக்கு சமர்ப்பணம்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்துக்கான பத்ம பூஷன் விருதை அவருடைய மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார். முன்னதாக பேசிய அவர், கேப்டன் இல்லை என்கிற வலி மனதுக்குள் உள்ளதாகவும், இருப்பினும் மத்திய அரசின் உயரிய விருதை வாங்குவதில் தங்கள் கட்சியினர் ஒட்டுமொத்தமாக பெருமை அடைவதாகவும் கூறினார். மேலும், இந்த விருது அவரை விரும்பிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சமர்ப்பணம் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News September 24, 2025
ASIA CUP: பாகிஸ்தானிடம் வீழ்ந்த இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மட்டும் போராடி அரைசதம் அடித்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தானும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து சற்று தடுமாறியது. ஆனாலும் ஹூசைன் தலத்(32), முகமது நவாஸ்(38) அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 18-வது ஓவரில் பாக்., இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
News September 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 24, 2025
Sports Roundup : இந்திய அணியில் மானவ் சுதார்

*ஆஷஸ் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. *புரோ கபடி லீக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது. *வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் ஸ்பின்னர் மானவ் சுதார் சேர்க்கப்படவுள்ளதாக தகவல். * பாக். எதிரான கடைசி 3 டி20 போட்டிகளில் குசால் மெண்டிஸ் டக் அவுட்டாகியுள்ளார்.