News April 15, 2025
ஒரு டாய்லெட் பிரச்னையால் ₹29.16 கோடி செலவு

போயிங் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டாய்லெட்டில் சிக்கிக் கொண்டுள்ளார். டாய்லெட்டின் தாழ்ப்பாள் பழுதானதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த USA விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், அனைத்து போயிங் விமானங்களின் பிரச்னைகளை சரி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ₹29.16 கோடி செலவில் 2,612 விமானங்களின் டாய்லெட் தாழ்ப்பாளை மாற்ற போயிங் முடிவு செய்துள்ளது.
Similar News
News January 17, 2026
டாஸை இழந்தது இந்தியா

U-19 World Cup: இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக டாஸ் போடுவதில் சற்று தாமதமானது. தற்போது இந்திய அணி சார்பில், வைபவ் சூரியவன்ஷி, ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். IND: ஆயுஷ் மாத்ரே(C), வைபவ் சூரியவன்ஷி, வேதாந்த், விஹான், அபிக்யன் குண்டு, சவுகான், பங்கலியா, அம்பரீஷ், ஹெனில், தீபேஷ், கிலான் படேல்.
News January 17, 2026
Gold Rate-ஐ குறைக்க நடவடிக்கை எடுப்பாரா நிர்மலா?

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று சவரனுக்கு ₹1,06,240-க்கு விற்கப்படும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, 2024-ல் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டது. அதேபோல், வரும் பட்ஜெட்டிலும் தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைத்தால், தங்கம் விலை கணிசமாக குறையும்.
News January 17, 2026
அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் (PHOTOS)

சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 முக்கிய வாக்குறுதிகளை EPS அறிவித்துள்ளார். *ரேஷன் அட்டை உள்ள அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ₹2,000 உதவித்தொகை. *ஆண்களுக்கும், மகளிரைப் போலவே டவுன் பஸ்களில் இலவச பயணம். *அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் கிராமங்கள், நகரங்களில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு. *100 நாள்கள் வேலைத் திட்டம் 150 நாள்களாக மாற்றப்படும். *5 லட்சம் மகளிருக்கு ₹25,000 மானியத்தில் ஸ்கூட்டர்.


