News March 22, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 214
▶குறள்: ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
▶பொருள்: ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

Similar News

News September 14, 2025

கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய அணி

image

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா- பாக் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு நமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த பாக்.குடன் இந்திய அணி விளையாடக் கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

News September 14, 2025

பயங்கரவாத அமைப்புக்கு நிதி வழங்கும் பாக்., அரசு

image

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் வாயிலாக சரியான பதிலடி கொடுத்த இந்தியா, முரிட்கேவில் அமைந்துள்ள லக்‌ஷர்-இ-தொய்பாவின் தலைமையகத்தை தரைமட்டமாக்கியது. இந்நிலையில், இதனை மறுகட்டமைப்பு செய்ய பாக்., முதற்கட்டமாக ₹1.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக, ‘வெள்ள நிவாரணம்’ என்ற பெயரிலும் LeT ஆதரவாளர்கள் நாடு முழுவதும் நிதி திரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

News September 14, 2025

உலக சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

image

இங்கிலாந்தில் நடைபெறும் உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா 2-வது தங்கத்தை வென்றது. பெண்கள் 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கஜகஸ்தானின் நாஜிம் கைசைபேயை எதிர்கொண்டார். கடுமையான போட்டியின் முடிவில் மீனாட்சி 4-1 என்ற கணக்கில் வென்றார். ஏற்கெனவே 58 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!