News March 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 210
▶குறள்: அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
▶பொருள்: வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
Similar News
News March 18, 2025
இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 100 பேர் பலி

காசா, லெபனான், சிரியா பகுதிகளில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க மறுத்ததாகக் கூறி இஸ்ரேல் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக, ஹமாஸ் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜனவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், தற்போது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
News March 18, 2025
கிசுகிசுவை விட அதுதான் மறக்க முடியாத வலி: ஷாம்

சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், தன்னைப் பற்றி கிசுகிசு வந்ததாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார். ஆனால் அதைவிட, ஒரு இயக்குநர் செய்ததுதான், தன் வாழ்வில் மறக்க முடியாதது என அவர் கூறியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுக்க ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து ₹3.5 கோடி வாங்கி கொடுத்ததாகவும், அதில் ₹1.5 கோடியை இயக்குநர் வைத்துக் கொண்டு, தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.
News March 18, 2025
காய்கறிகளின் விலை குறைந்தது

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை மளமளவென குறைந்துள்ளது.
அவரை (கிலோ) ₹35, வெண்டை ₹35, பீன்ஸ் ₹30, பீட்ரூட் ₹35, பாகற்காய் ₹35, கத்தரிக்காய் ₹55, முட்டைக்கோஸ் ₹30, உருளைக்கிழங்கு ₹40, முருங்கைக்காய் ₹60, கொத்தமல்லி ₹40, புடலங்காய் ₹30, தக்காளி ₹15க்கும், பீர்க்கங்காய் ₹18, சுரைக்காய் ₹15, முள்ளங்கி ₹15, சின்னவெங்காயம் ₹36க்கும் விற்பனை செய்யப்படுகிறது.