News March 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: தீவினையச்சம்
▶குறள் எண்: 209
▶குறள்: தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
▶பொருள்: தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
Similar News
News March 17, 2025
நாளை பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்களாக தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புவார் என நாசா உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பேஸ்X விண்கலம் மூலம் ISSல் இருந்து சுனிதா வில்லியம்ஸூம், புட்ச் வில்மோரும் உள்ளூர் நேரப்படி நாளை மாலை 5.57 மணிக்கு பூமிக்கு திரும்புவார்கள். அதன் பின் கேப்சூல் மூலம் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் தரையிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 17, 2025
இனியாவது நிம்மதியாக உறங்குங்கள் பிந்துகோஷ்

நடிகை பிந்துகோஷ் சிகிச்சைக்காக உதவி கேட்டும், முன்னணி நடிகர்கள் யாரும் உதவி செய்யவில்லை. தவிர, அவர் இறந்துவிட்டதாக பல முறை வதந்திகள் தான் வந்தன; ஆனால், இப்போது நிஜமாகவே பிரிந்து சென்றுவிட்டார். அவரது கடைசி நொடிகளும், கண்ணீரும் வலியுமாய் கரைந்துவிட்டது. அவர் மறைவை அடுத்து, ‘வாழும்போது நிம்மதியில்லாமல் வாழ்ந்த நீங்கள், இனியாவது நிம்மதியாக உறங்குங்கள்’ என பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
News March 17, 2025
கிறிஸ் கெயில் பெயரில் ₹2.8 கோடி மோசடி!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் பெயரை பயன்படுத்தி தன்னிடம் ₹2.8 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக 60 வயது மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான அவர், காபி பவுடர் கம்பெனிக்கு கிறிஸ் கெயில் தான் புரமோட்டராக இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி மோசடி செய்ததாக கூறியுள்ளார். இதில் தனது சகோதரர் உள்பட 6 பேர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.