News February 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 188
▶குறள்:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
▶பொருள்: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.
Similar News
News February 24, 2025
PAK அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்த கோலி

பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து அசத்திய கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் 3 முறைக்கு மேல் ஆட்ட நாயகன் விருது பெறாத நிலையில், கோலி தனிப்பட்ட இந்த சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் சதமடித்த கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
News February 24, 2025
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அறிவிப்பு

அகமதாபாத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாளில் விரிவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் தேதி கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் நடைபெறுகிறது. இரண்டு கூட்டங்களுக்கும் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்க உள்ளார். இதில் அரசியல் அமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.
News February 24, 2025
தமிழக மீனவர்கள் கைது: அண்ணாமலை கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறல் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகவும், தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.