News February 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 187
▶குறள்:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
▶பொருள்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
Similar News
News February 23, 2025
வரலாற்று சாதனை படைப்பாரா கோலி?

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கிங் கோலி வரலாற்று சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 14,000 ரன்களை தொடர கோலிக்கு இன்னும் 15 ரன்களே தேவை. அதனை அவர் எடுத்தால், சச்சின், சங்ககாராவுக்கு அடுத்தபடியாக அந்த மைல்கல்லை எட்டிய 3 ஆவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதனால், இன்றைய ஆட்டத்தை கோலி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
News February 23, 2025
சிக்கன் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இறைச்சி விலை இன்று (பிப்.23) சற்று குறைந்துள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ₹130க்கு விற்பனையான நிலையில், இன்று ₹10 குறைந்து ₹120க்கு விற்பனையாகிறது. நாட்டுக்கோழி கிலோ ₹350க்கும், முட்டை விலை 50 காசுகள் குறைந்து ₹5.20க்கும் விற்பனையாகிறது. ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாகவே இந்த வாரமும் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
News February 23, 2025
ரயில்களில் தலையணை, பெட்ஷீட் திருடினால்..?

யாருக்கு தெரியப்போகுது என ட்ரெயினில் பயணிக்கும் போது, தலையணை – பெட்ஷீட்களை திருடினால் என்ன தண்டனை என தெரியுமா? ரயில்வே சொத்துச் சட்டம், 1966 இன் படி, திருடிய பொருட்களுடன் பிடிபட்டால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் விதிக்கப்படும். ட்ரெயின்களின் ஏசி கோச்களில் வழங்கப்படும் தலையணை திருடுபோனால், அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தமும் செய்யப்படுகிறதாம்.