News February 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 185
▶குறள்:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
▶பொருள்: ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News February 22, 2025
கேரள பாஜக தலைவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுப்பு

தொலைக்காட்சி விவாதத்தில் இந்திய முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனக்கூறிய கேரள பாஜக தலைவர் PC ஜார்ஜுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இதே போன்ற வழக்கு ஒன்றில் கடந்த 2022இல் வழங்கப்பட்ட ஜாமின் நிபந்தனைகளை மீறி, மீண்டும் அவதூறு கருத்துக்களை தெரிவிக்கும் இவருக்கு முன்ஜாமின் வழங்கினால், அது மக்களிடம் தவறான செய்தியை கொண்டு செல்லும் எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
News February 22, 2025
ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது: RN ரவி

ஒவ்வொரு முறையும் அமைச்சரவை ஆலோசனைபடி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என ஆளுநர் RN ரவி உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் உள்ளதாகவும், மசோதாவை நிறுத்தி வைத்தாலே அந்த மசோதா செயலிழந்துவிட்டதாக அர்த்தம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News February 22, 2025
பார்வையில்லை.. ஆனால் மன உறுதியால் கலெக்டர்

மகாராஷ்டிரா இளம்பெண் பிரன்ஜால் பாட்டீல் இளவயதிலேயே பார்வையை இழந்தார். மனம் தளராத அவர், பிரெய்லி, ஸ்கிரினிங் தொழில்நுட்பம் மூலம் கல்வி கற்றார். 2016இல் ரயில்வேயில் முதல் முயற்சியில் வேலை கிடைத்தபோதும், நிராகரிக்கப்பட்டார். இருப்பினும் அவர், 2017இல் ஐஏஎஸ்சில் தேர்வெழுதி நாட்டிலேயே 124ஆவது ரேங்க் வந்தார். இதன்மூலம் நாட்டில் முதல் பார்வையற்ற ஐஏஎஸ் அதிகாரி எனும் பெருமை பெற்றார்.