News February 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: வெஃகாமை
▶குறள் எண்: 180
▶குறள்: இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
▶பொருள்: விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
Similar News
News December 7, 2025
ஷேக் ஹசினா எத்தனை நாள் இந்தியாவில் இருப்பார்?

ஷேக் ஹசினா விரும்பும் வரை இந்தியாவில் இருக்கலாம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா வந்துள்ளார். அந்த காரணங்கள் சரியாகும் வரை இங்கு இருப்பது அல்லது திரும்பி செல்வது என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அதேவேளையில், வங்கதேசத்தின் ஜனநாயக அரசியல் செயல்முறைகளை இந்தியா ஆதரிப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 7, 2025
ICU-வில் INDIA கூட்டணி: உமர் அப்துல்லா

உட்பூசல்கள், பாஜகவின் தொடர் வெற்றிகளால் INDIA கூட்டணி ICU-ல் இருப்பதாக J&K CM உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்போது, பிஹார் போன்ற தோல்வி முடிவுகள் மீண்டும் ICU-விற்கு அனுப்பிவிடுகிறது. நிதிஷ்குமாரை NDA கைகளில் சேர்த்தது, ஹேமந்த் சோரன் கட்சியை தொகுதி பங்கீட்டில் இருந்து விலக்கியது, பிஹாரில் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.


