News February 12, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வெஃகாமை ▶குறள் எண்: 176 ▶குறள்: அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். ▶ பொருள்: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

Similar News

News February 12, 2025

கூகுள் மெசேஜஸ் செயலியில் இருந்து வாட்ஸ்அப் கால்

image

கூகுள் மெசேஜஸ் செயலியில் இருந்து நேரடியாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் அம்சம் விரைவில் வரவுள்ளது. தற்போது இந்த ஆப் மூலம் கூகுள் மீட் வீடியோ கால்களை மட்டுமே செய்ய முடியும். இதன் பயன்பாடுகளை மாற்றுவதற்கு பதிலாக, பயனர்களுக்கு மிகவும் வசதியாக இந்த புதிய அம்சத்தை கூகுள் கொண்டு வருகிறது. வாட்ஸ்அப்-ஐ போனில் இன்ஸ்டால் செய்தால் மட்டுமே இந்த வசதி செயல்படும்.

News February 12, 2025

இன்று 3வது ODI: அணியில் பந்த், அர்ஷ்தீப்?

image

IND VS ENG அணிகள் மோதும் 3வது ODI இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. IND இறுதி அணியில் ராகுல், ஹர்ஷித்துக்கு பதிலாக பந்த், அர்ஷ்தீப் வர வாய்ப்புள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு கடினமாகவும், பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் என்றும், பனி பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Sports 18-2, ஹாட்ஸ்டாரில் பிற்பகல் 1.30 மணி முதல் LIVEல் பார்க்கலாம். WAY2NEWSல் லைவ் ஸ்கோர் அப்டேட்களைப் பெறலாம்.

News February 12, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

✍அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை; அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது. ✍வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல; வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. ✍பட்டுக் கையுறைகளுடன் உங்களால் புரட்சி செய்ய முடியாது. ✍நான் யாரையும் நம்புவதில்லை; என்னையே கூட நம்புவதில்லை. ✍இந்த உலகில் வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதைத் தான் வரலாறு காட்டுகிறது – ஜோசப் ஸ்டாலின்.

error: Content is protected !!