News January 25, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

Similar News

News January 6, 2026

திருவள்ளூர்: குளத்தில் தத்தளித்து பலி!

image

பொன்னேரி: சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதி(21). இவர் நேற்று(ஜன.5) மாலை தனது நண்பர்களுடன் தடப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு குளிக்கச் சென்றார். மது அருந்தி குளத்தில் இறங்கிய அவர், சேற்றில் சிக்கி உயிரிழந்தார், அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 6, 2026

பொங்கல் பரிசுத் தொகை ₹5,000 வழங்க வேண்டும்: EPS

image

பொங்கல் பரிசை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள EPS, எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக ₹5,000 கொடுக்க சொன்ன ஸ்டாலின், தற்போது ₹3,000 மட்டும் கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மக்களுக்கு ₹5,000 வழங்க திமுக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News January 6, 2026

‘ஜனநாயகன்’ படக்குழு ஐகோர்ட்டில் அவசர மனு!

image

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே, தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பப்பட்ட நிலையில், இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை என படக்குழு குற்றம்சாட்டியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் சுமார் 2 மணியளவில் விசாரணைக்கு வரவுள்ளது.

error: Content is protected !!