News January 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Similar News
News January 13, 2026
சொந்த ஊர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது என்ன?

நாளை போகி பண்டிகையில் தொடங்கி ஊரெங்கிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டவுள்ளது. அடிச்சி புடிச்சி டிக்கெட் வாங்கிய பலரும் இன்று ஊருக்கு புறப்படவுள்ளார்கள். பயணத்தின் போது, சொந்த ஊரின் வாசமும், சொந்தக்காரர்களின் நேசமும், ஊரின் வயல்வெளியும், நீரோடும் கால்வாய்களும், படித்த பள்ளிக்கூட கட்டடமும் மனதில் அலைப்பாயும். உங்களுக்கு சொந்த ஊர் என்றால் என்ன ஞாபகம் வரும்.. மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க?
News January 13, 2026
டிகிரி போதும்: ₹56,000 சம்பளம்

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 350 SSC (Technical) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ◈வயது: 20–27 வரை◈கல்வித்தகுதி: இன்ஜினியரிங் டிகிரி ◈தேர்ச்சி முறை: Merit List & நேர்காணல் ◈சம்பளம்:₹56,100- ₹1,77,500 வரை ◈ 05.02.2026 வரை விண்ணப்பிக்கலாம் ◈ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 13, 2026
தெருநாய்களை நேசித்தால் வீட்டுக்கு தூக்கிட்டு போங்க: SC

தெருநாய் தாக்கி யாராவது காயம் அடைந்தாலோ, இறந்தாலோ உள்ளாட்சி அதிகாரிகளும், அந்த நாய்களுக்கு உணவளிப்பவர்களும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று SC தெரிவித்துள்ளது. மேலும், தெருநாய்களை நேசிப்பவர்கள், அவற்றை வீட்டிற்கு தூக்கி செல்லுங்கள் என தெரிவித்து, தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாகவும் நீதிபதி விக்ரம் நாத் அமர்வு கூறியுள்ளது.


