News October 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 504 ▶குறள்: குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ▶பொருள்: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.
Similar News
News October 30, 2025
பயங்கரவாதிகள் தாக்குதல்: 6 பாக்., ராணுவத்தினர் பலி

பாக்., – ஆப்கன் மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், பாக்., ராணுவ கான்வாய் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கனை ஒட்டியுள்ள கைபர் பக்துன்குவா பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், கேப்டன் உள்பட 6 பாக்., ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
News October 30, 2025
Sports Roundup: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கம்

*ஆசிய யூத் கேம்ஸ் மல்யுத்தம் 55 கிலோ பிரிவில், ஜெய்வீர் சிங் தங்கம் வென்றார். *65 கிலோ எடைப்பிரிவில் கெளரவ் புனியாவுக்கு வெள்ளி கிடைத்தது. *வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது டி20-ல் வங்கதேசம் தோல்வி. *புரோ கபடி குவாலிஃபையர் இரண்டில் புனேரி பல்தான் அணி 50-45 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது. *ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20-ல் ஆப்கானிஸ்தான் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
News October 30, 2025
கரூரில் தவெகவினர் தாக்கப்பட்டனர்: CTR

கரூர் துயரம் நடந்த முதல் நாளே தானும், N.ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கரூருக்கு வெளியே காத்திருந்ததாக CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸார் தங்களை அனுமதிக்கவில்லை என்றும், தவெக கொடி கட்டிய வாகனங்களுக்கு ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறினார். அத்துடன், அனைத்து தவெக நிர்வாகிகளும் தாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


