News October 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 501 ▶குறள்: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.▶பொருள்: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
Similar News
News October 27, 2025
இந்தியா – சீனா நேரடி விமான சேவை துவங்கியது

கொரோனா தொற்றின்போது இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நேரடி விமான சேவை துவங்கியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சீனாவுக்கு 175 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. நவ.10-ல் டெல்லியில் இருந்தும் சீனாவுக்கு நேரடி விமான சேவை துவங்கவுள்ளது. இது இரு நாடுகளிடையே வர்த்தகம், சுற்றுலா உள்பட இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்தும்.
News October 27, 2025
Cinema Roundup: ரஜினி உடன் ராகவா லாரன்ஸ்

*ரஜினிகாந்த் உடன் ராகவா லாரன்ஸ் சந்திப்பு.
*மாதவன் நடிக்கும் G.D.N படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
*ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ‘மணமகனே’ பாடல் ரிலீஸானது.
*ஜி.வியின் ‘Blackmail’ படம் அக்.30-ல் SUN NXT ஓடிடியில் வெளியாகிறது.
*சார்பட்டா – 2 பட ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக ஆர்யா தகவல். *அடுத்த ஆண்டு 3 படங்களை ரிலீஸ் செய்ய சூர்யா திட்டம்.
News October 27, 2025
அக்.26: வரலாற்றில் இன்று

*1971 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
*1941 – நடிகர் சிவகுமார் பிறந்தநாள்.
*1977 – இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா பிறந்தநாள்.
*1986 – ஆஸி., கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பிறந்தநாள்.
*2002 – மூத்த அரசியல்வாதி வாழப்பாடி ராமமூர்த்தி நினைவுநாள்.


