News October 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 496
▶குறள்:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.
Similar News
News October 22, 2025
இஸ்லாமின் அரசியல் கவனிக்கப்படவில்லை: யோகி

இந்தியாவில் சனாதன தர்மத்தை அழிக்க (அ) மட்டுப்படுத்த இஸ்லாம் நினைத்தது என்று உ.பி., CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்கு எதிராகவே சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட பேரரசர்கள் போராடி சனாதன தர்மத்தை நிலைநிறுத்தினர் என்றார். ஆனால், பிரிட்டிஷ் காலனித்துவம் பற்றிய வரலாற்றை படிக்கும் நாம், இஸ்லாமின் இதுபோன்ற அரசியலையும் அறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News October 22, 2025
FLASH: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக சற்றுமுன் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். SHARE IT.
News October 22, 2025
BREAKING: திமுகவில் மாற்றம்.. கனிமொழிக்கு முக்கியத்துவம்

2026 தேர்தலுக்கு தென் மாவட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகள் தென் மண்டல பொறுப்பாளர் MP கனிமொழியின் வசம் சென்றுள்ளது. இதில், நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ளன. குறிப்பாக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் தொகுதிகளில் உள்கட்சி பூசல் நடந்து வரும் நிலையில், தென் மாவட்ட திமுகவில் கனிமொழியின் கை ஓங்கியுள்ளது.