News October 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 495
▶குறள்:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
▶பொருள்:தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.
Similar News
News March 12, 2026
திருத்தணி: 10ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர்: திருத்தணியைச் சேர்ந்தவர் 15 வயது மாணவர். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச்.11) தமிழ் பொது தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பியவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் அவரை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 12, 2026
கிருஷ்ண துளசி vs ராம துளசி! வீட்டில் எது இருக்கணும்?

ராம துளசி பச்சை நிறத்திலும், கிருஷ்ண துளசி ஓரளவு பழுப்பு மற்றும் ஊதா நிறத்திலும், குடை வடிவத்திலும் காணப்படுகிறது. ராம துளசி மிகவும் லேசான நறுமணத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிருஷ்ண துளசி மிகவும் வலுவான நறுமணத்தை கொண்டுள்ளது. வீட்டின் வடகிழக்கு திசையில், கிருஷ்ண துளசியை நடுவது வீட்டின் நிதி நிலைமையை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News March 12, 2026
விஜய்யை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர் யார்?

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிட போவதாக தவெக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட தகுதியான வேட்பாளரை தேடும் வேட்டையில் திமுக இறங்கியுள்ளதாம். அதன்படி வடசென்னையில் பலமாக உள்ள சேகர்பாபு பெரம்பூரிலும், கிறிஸ்துவ சமயத்தை சேர்ந்த இனிகோ ருதயராஜை திருச்சி கிழக்கிலும் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


