News October 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 485 ▶குறள்: காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். ▶பொருள்: பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
Similar News
News October 11, 2025
கரூர் துயரம்: TN அரசுக்கு கேள்விகளை அடுக்கிய SC

கரூர் துயரத்தில், 40 பேரின் உடல்களை சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள் உடற்கூராய்வு செய்ததாக SC-ல் இறந்தவர்கள் தரப்பு தெரிவித்தது. இதையடுத்து இரவே உடற்கூராய்வு முடித்தது எப்படி? ஹாஸ்பிடலில் உடற்கூராய்வு டேபிள்கள் எத்தனை இருந்தன? டாக்டர்கள் தான் உடற்கூராய்வு செய்தார்களா என்று TN அரசுக்கு SC கேள்வி எழுப்பியது. இதுபற்றி பிராமண பத்திரம் தாக்கல் செய்வதாக தமிழக அரசு தரப்பு உறுதியளித்தது.
News October 11, 2025
போர் நிறுத்தம்: பயணத்தை தொடங்கிய பாலஸ்தீனியர்கள்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். இஸ்ரேல் படைகள் பின்வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சற்று நிம்மதியோடு பாலஸ்தீனியர்கள், தங்களது சொந்த இடங்களுக்கு சாரை சாரையாக திரும்புகின்றனர். புகைப்படங்களை பார்க்க SWIPE செய்யவும்.
News October 11, 2025
குணமடைந்தார் நல்லக்கண்ணு

மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். வயது மூப்பினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் பல நாள்களாக செயற்கை சுவாச சிகிச்சையிலும், தீவிர சிகிச்சை பிரிவிலும் இருந்த அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார். முன்னதாக, தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நல்லக்கண்ணு நன்றி தெரிவித்தார்.