News October 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 481 ▶குறள்: பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. ▶பொருள்: தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.
Similar News
News October 7, 2025
வலுவான கால்கள் பெற 4 பயிற்சிகள்

கால்கள் தொடர்ந்து செயல்படும்போது, உடலுக்கு சிறந்த ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகின்றன. இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு பயனளிக்கின்றன. எனவே, கால்களை வலுவாக வைத்துக்கொள்வது, நீண்டகால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். வலுவான கால்களுக்கு என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்று, மேலே போட்டோக்கள் உள்ளன. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கால்கள் வலுவாக இருக்கா?
News October 7, 2025
OpenAI நிறுவனத்திற்கு CEO ஆகும் AI: சாம் ஆல்ட்மேன்

மனிதர்களின் தனித்திறன் என்பது அறிவாற்றல் அல்ல; பிறர் மீது அக்கறை கொள்ளும் திறன் என OpenAI CEO சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். மனிதர்களை விட AI அசாதாரண திறன் கொண்ட அதிபுத்திசாலியாக மாறும் எனவும், OpenAI நிறுவனத்திற்கு ஒரு AI, CEO-ஆக வரும் காலம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வருங்காலத்தில் மற்றவர்களுக்கு உதவுவது, கவனித்து கொள்வது சார்ந்த புதிய வேலைகள் உருவாகும் என்றும் கணித்துள்ளார்.
News October 7, 2025
அக்டோபர் 7: வரலாற்றில் இன்று

*1708 – குரு கோபிந்த் சிங் மறைந்த நாள். *1920 – தமிழ் கவிஞர் முடியரசன் பிறந்தநாள். *1952 – ரஷ்ய அதிபர் புடின் பிறந்தநாள். *1978 – வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் பிறந்தநாள். *1979 – நடிகர் நரேன் பிறந்தநாள். *1981 – வீணை கலைஞர் வைக்கம் விஜயலட்சுமி பிறந்தநாள். *1987 – சீக்கிய தேசியவாதிகள் இந்தியாவில் இருந்து காலிஸ்தான் விடுதலையை அறிவித்தனர். எந்நாடுகளும் இதை அங்கீகரிக்கவில்லை.