News October 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 478 ▶குறள்: ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. ▶பொருள்: வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

Similar News

News October 4, 2025

இன்று புரட்டாசி சனிக்கிழமை.. செய்ய வேண்டிய வழிபாடு!

image

புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருப்பவர்களை சனி பகவான் துன்புறுத்துவது கிடையாது என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பகல் 12.30 முதல் 01.20 வரையிலான நேரத்தில் தளிகை இட்டு வழிபடலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவதும், அருகில் உள்ள பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஹயக்ரீவர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு. SHARE IT.

News October 4, 2025

தவெக நிர்வாகிகளை கைது செய்ய விரைந்த தனிப்படை

image

கரூர் துயரம் தொடர்பான வழக்கில் N.ஆனந்த், CTR நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைக்குள் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை HC உத்தரவிட்டுள்ளதால், கட்சியின் உயர் பொறுப்பாளர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.

News October 4, 2025

TVK-வுக்கு நாங்க மார்க்கெட்டிங் ஆபிசரா? அண்ணாமலை

image

சும்மா நொச்சு நொச்சுன்னு எங்ககிட்டயே கேட்குறீங்க, போய் விஜய் கிட்ட கேளுங்க, தவெககாரங்க கிட்ட கேளுங்க என்று கடுகடுத்துள்ளார் அண்ணாமலை. பாஜகவின் A டீம் தான் திமுக என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். தவெகவுக்கு நாங்கள் (பாஜக) என்ன மார்க்கெட்டிங் ஆபிஸரா என்றும் அவர் கோபமாக கேள்வி எழுப்பினார். கரூர் சம்பவம் குறித்து கருத்துகள் ஏற்கெனவே சொல்லியாச்சு என்றும் கூறினார்.

error: Content is protected !!