News October 1, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 475 ▶குறள்: பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். ▶பொருள்: மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

Similar News

News October 1, 2025

₹1000 அபராதம் … வந்தது அறிவிப்பு

image

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதற்கு 50 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News October 1, 2025

அக்டோபர் 1: வரலாற்றில் இன்று

image

*அனைத்துலக முதியோர் நாள்.
*உலக சைவ உணவு நாள்.
*1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
*1847 – அன்னி பெசன்ட் பிறந்தநாள்.
*1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
*1927 – நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்.
*1953 – சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.
*2006 – ‘பாண்டிச்சேரி’ பெயர் ‘புதுச்சேரி’ என மாற்றப்பட்டது.

News October 1, 2025

இந்து அல்லாதோர் கோயில் முன்பு.. பாஜக Ex MP சர்ச்சை

image

இந்துக்கள் அல்லாதவர்கள் கோயில் பிரசாதம் விற்றால், அவர்களை அடித்து நொறுக்குங்கள் என பாஜக முன்னாள் MP பிரக்யா தாகூர் சர்ச்சையாக தெரிவித்துள்ளார். போபாலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நவராத்திரி விழாவில் பேசிய அவர், இந்து அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள் என கூறினார். மேலும், பிற மடத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாடம் கற்பிக்க வீட்டிலேயே ஆயுதங்களை வைத்திருங்கள் என்றார்.

error: Content is protected !!