News September 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 473 ▶குறள்: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். ▶பொருள்: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
Similar News
News September 29, 2025
சிந்தூருக்கு கிடைத்த திலக் (வர்மா) Emotional

ஆசிய கோப்பை ஃபைனலில் பவுலிங்கில் பாக்.,ஐ கட்டுப்படுத்திய இந்தியா, சேஸிங்கின் தொடக்கத்தில் தடுமாறியது. அப்போது களத்தில் இறங்கிய திலக் வர்மா, தனது நிதான ஆட்டத்தால் 69 ரன்களை குவித்து, அவுட்டாகாமல் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது போல், விளையாட்டில் பாக்.,க்கு ‘திலக்’ வர்மா விளாசியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News September 29, 2025
இந்தியாவின் வெற்றி என்பது விதி: அமித்ஷா

எந்த களமாக இருந்தாலும் இந்தியா வெற்றி பெறும் என்பது விதி என்று ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்தியாவை அமித்ஷா பாராட்டியுள்ளார். அதேபோல், இந்தியாவின் புதிய வழங்குநர்கள் என ஜெய்சங்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையை 9-வது முறையாக இந்தியா கைப்பற்றிய நிலையில், <<17861425>>முர்மு<<>>, <<17861414>>மோடி<<>> உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 29, 2025
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

*விதைத்தவன் உறங்கலாம், ஆனால் விதைத்தவன் ஒருபோதும் உறங்குவதில்லை.
*கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால், போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
*தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.
*நம் தன்னம்பிக்கை, திட்டம், நடவடிக்கை ஆகியவை தீவிரமாகியிருக்கும் போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல.