News September 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 472 ▶குறள்: ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
Similar News
News September 28, 2025
பச்சிமோத்தாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

பச்சிமோத்தாசனம் செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். படபடப்பு, டென்சன் நீங்கி மன அமைதி உண்டாகும். இதனை செய்ய முதலில், கால்களை நேராக நீட்டி உட்காரவும். அடுத்து முன்னோக்கி குனியுங்கள். இரு கால் கட்டை விரல்களையும் கொக்கி போல் பிடித்துக்கொண்டு, நெற்றியால் கால் முட்டிகளை தொட வேண்டும். இதே நிலையில் இருந்துகொண்டு 1-10 வரை எண்ணவும். பின்னர் ரிலாக்ஸ் செய்யவும்.
News September 28, 2025
நவராத்திரி 7-ம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்!

நவராத்திரியின் கடைசி 3 நாள்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். இன்று இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
ஓம் லம் லஷ்மியை நம
காயத்ரி: ஓம் மஹாதேவ்யைச் வித்மஹே
விஷ்ணு பத்யைசதீமஹி
தன்னோ லஷ்மி பிரசோதயாத்
பொருள்:
சர்வ உலகங்களின் தாயாகிய மகாலட்சுமியை நாம் தியானிக்கிறோம், மகாவிஷ்ணுவின் பத்தினியான அந்த லக்ஷ்மி தேவி எங்கள் அறிவை ஒளிரச் செய்யட்டும். SHARE.
News September 28, 2025
WhatsApp-க்கு போட்டியாக வந்தது ‘ARATTAI’

வாஸ்ட்ஆப் வந்தபின், SMS மறந்தேவிட்டது. அந்த அளவுக்கு மக்களின் போன்களில் அது இடம்பிடித்துவிட்டது. இந்நிலையில், இந்தியாவின் ZOHO நிறுவனம் அரட்டை (Arattai) என்ற மெசேஜிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. வீக் சிக்னலிலும் தடையின்றி செயல்படும், பேசிக் ஸ்மார்ட்போன்களில் கூட வேலை செய்யும், சிறந்த செயல்பாடு இதன் சிறப்பம்சங்களாக கூறப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய செயலியான இது, வாட்ஸ்ஆப்பை வெல்லுமா?