News September 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 470
▶குறள்:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
▶பொருள்: தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்ட மாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

Similar News

News September 26, 2025

தீபாவளியை கொண்டாட 12,000 சிறப்பு ரயில்கள்

image

தீபாவளி மற்றும் சாத் பண்டிகையையொட்டி அக்டோபர் மாத்தில் 12,000 சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூடுதலாக 3 கோடி பேர் பயன்பெறுவார்கள் என தெரிவித்த அவர், சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1 முதல் 45 நாட்​களுக்​கும் மேலாக இயக்​கப்​படும் எனவும் குறிப்பிட்டார். தேவையின் அடிப்​படை​யில் கூடு​தல் ரயில்​கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News September 26, 2025

வரலாற்றில் இன்று

image

1905 -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்பு சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்
1932 – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்
1954 – ஜப்பான் கப்பல், சூறாவளியில் மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர்
1954 – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் நினைவு நாள்

News September 26, 2025

சோனம் வாங்சுக் அமைப்பின் உரிமம் ரத்து

image

லடாக் கலவரத்துக்கு சமூக ஆர்வலர் <<17821134>>சோனம் வாங்கத்தே காரணம் <<>>என தெரிவித்திருந்த மத்திய அரசு, அவரது அமைப்பின் உரிமத்தை ரத்து செய்தது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் நிதி ரத்தாகும். ஸ்வீடன் நாட்டிலிருந்து சோனம் வாங்கத் அமைப்புக்கு பெறப்பட்ட நிதி தேச நலனுக்கு எதிரானது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிதி பரிமாற்றங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!