News September 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 462 ▶குறள்: தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். ▶பொருள்: தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.
Similar News
News March 5, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்ததால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவருடன் இருந்த பலரும் தற்போது அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் EX மா.செ., ஆக இருந்த முல்லை தயாளன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். EPS முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது OPS தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.
News March 5, 2026
கிறிஸ்டோபர் திலக் வங்கிக் கணக்கில் ₹13,000

காங்., ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் தனது வேட்புமனுவில் ஒரு சவரன் தங்க நகை, வங்கிக் கணக்கில் ₹13,000 மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவர் MP-ஆக தேர்வாகும் நிலையில், மிகவும் ஏழ்மையான MP என்ற பெருமையை பெறுவார். 2019-ல் MP ஆன ராஜஸ்தானின் சிகாரைச் சேர்ந்த 67 வயதான சுமேதா நந்த் சரஸ்வதி (₹34,311) நாட்டின் மிகவும் ஏழ்மையான MP என ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை தெரிவிக்கிறது.
News March 5, 2026
ஒருநாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே பள்ளி..

பின்லாந்தின் கல்வி முறை உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. இங்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு 5 மணிநேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகிறார்கள். ஒவ்வொரு பீரியடுக்கு பிறகு 15 நிமிட இடைவேளையும், சிறிய வீட்டுப்பாடமும் உண்டு. இந்த மன அழுத்தமில்லாத சூழல், குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்றல் ஆர்வத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பின்லாந்து உலகளாவிய கல்வி மதிப்பீடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


