News September 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
Similar News
News March 9, 2026
உச்ச தலைவராக நீடிக்க எனது அங்கீகாரம் வேண்டும்: டிரம்ப்

ஈரானின் புதிய உயர் தலைவர் அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு நல்ல தலைவரை நான் தேர்வு செய்வேன் என்றும், அதற்கு தகுதியான பலர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரான் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமிக்க முயற்சித்ததாகவும், தான் அதை தடுத்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
News March 9, 2026
தமிழ்நாடு ஒருநாள் ஏலத்திற்கு வந்துவிடும்: சீமான்

திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், தாலிக்குத் தங்கம், இலவச வீடு, உரிமைத்தொகை என இலவசமாக சொல்லிக் கொண்டே போனால் தமிழ்நாடு ஒருநாள் ஏலத்திற்கு வந்துவிடும் என சீமான் கூறியுள்ளார். பாண்டியராஜன் படத்தில் வருவது போல் கடைசியில் ‘பிம்பிளிக்கி பிளாப்பி’ என தமிழ்நாடு பிளாப் ஆகப் போகிறது எனவும் விமர்சித்துள்ளார்.
News March 9, 2026
FLASH: விலை ₹68,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

மார்ச் மாத சலுகையாக ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. பல்வேறு மாடல் கார்களுக்கு சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளன. கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.


