News September 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 447 ▶குறள்: இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். ▶ பொருள்: இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?
Similar News
News March 5, 2026
வான்கடேவில் தோனி-சாக்ஷி தம்பதி!

விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியை Ex. கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் கண்டுகளிக்கும் வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. அர்ஜூன் டெண்டுல்கர் திருமணத்தில் இருவரும் பங்கேற்ற நிலையில் ஜோடியாக வான்கடேவுக்கு சென்றுள்ளனர். அதே போன்று ரோகித் சர்மா உள்ளிட்ட பிரபலங்களும் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.
News March 5, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு கோயில் விசேஷம் காரணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. இதேபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9-ல் புதுக்கோட்டை, பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். SHARE IT
News March 5, 2026
BREAKING: மே.வங்க கவர்னராகிறாரா R.N.ரவி?

தமிழக கவர்னர் R.N.ரவி, மே.வங்க மாநில கவர்னராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே.வங்க CM மம்தா பானர்ஜி இதை தன் X-பதிவில் குறிப்பிட்டுள்ளார். அம்மாநில கவர்னராக இருந்துவரும் சி.வி.ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா செய்ததால், R.N.ரவி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக தன்னிடம் உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக மம்தா கூறியுள்ளார்.


