News August 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 444
▶குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
▶ பொருள்: அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
Similar News
News August 31, 2025
டேவிட் வார்னரின் புது கெட்டப்

ஆஸி., கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புது கெட்டப்பில் ரசிகர்களை ஆச்சரியப் படுத்தியுள்ளார். வழக்கமாக குறைவான முடியுடன் காட்சியளிக்கும் அவர், தற்போது நீளமாக முடி வளர்த்துள்ளார். புது கெட்டப் அருமையாக வந்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
News August 31, 2025
Beauty Tips: முடி அடர்த்தியா வளர இந்த ஒரு விஷயம் போதும்

ஒருவரின் முக அழகை முடிவு செய்வது முடியாக தான் இருக்கிறது. இதனால் அதீத முடி உதிர்வால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை சரி செய்ய ஒரு ஸ்பூன் எள் போதும். எள்ளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் இருப்பதால் முடி சார்ந்த பிரச்னைகளை இது சரி செய்கிறது. இதற்கு, வாரத்திற்கு இருமுறை எள்ளை அரைத்து தயிருடன் சேர்த்து ஹேர் பேக் போட்டுவந்தால் முடி அடர்த்தியாக வளரும். SHARE.
News August 31, 2025
BREAKING: விஜய் தலைமையில் கூட்டணி

2026 தேர்தலில் விஜய் தலைமையில் புதிய அணி அமையும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள், சீமான் தனித்து போட்டி என்ற சூழல் இருக்கும் நிலையில், விஜய் தலைமையில் நான்காவதாக ஒரு அணி உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என டிடிவி ஏற்கெனவே கூறி இருந்தார். அவரது கருத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது.