News August 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 438 ▶குறள்:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
▶ பொருள்: எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.
Similar News
News August 25, 2025
பாலைய்யாவுக்கு கிடைத்த World Book of Records அங்கீகாரம்!

இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, World Book of Records UK, Gold Edition-ல் நடிகர் பாலகிருஷ்ணா இடம்பெற்றுள்ளார். தன்னுடைய அதிரடி மாஸ் ஆக்சன் காட்சிகளின் மூலம் பரீட்சயமான பாலைய்யா தான், இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் தெலுங்கு நடிகர். 1974-ல் ‘தட்டம்மா கலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், தற்போது வரை 160 படங்களில் நடித்துள்ளார்.
News August 25, 2025
கடவுள் ராமன் குறித்து வன்னி அரசு சர்ச்சை பேச்சு

இந்து கடவுள் ராமன் பற்றிய விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது. ராமனும், ராமதாஸும் வேறு வேறல்ல, கருத்தியல் ரீதியாக இருவரும் ஒன்றே; பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன், பார்ப்பன கொள்கைகளுக்காக படுகொலை செய்ய தூண்டுபவர் ராமதாஸ் என சர்ச்சையாக பேசியுள்ளார். மேலும், தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
விநாயகர் சதுர்த்தி இனி மாநில விழா.. MH அரசு அறிவிப்பு

ஆக.27-ல் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு மாநில விழா அந்தஸ்தை மகாராஷ்டிர அரசு வழங்கியுள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். உங்கள் ஊரில் விநாயகர் சதுர்த்தி விழாக்கோலாம் பூண்டுவிட்டதா?