News August 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 437 ▶குறள்: செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். ▶ பொருள்: நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.
Similar News
News March 13, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்துள்ளது. இது மக்களிடையே நிலவும் அச்சங்களை போக்கும். SM-களில் பரவும் வதந்திகளை கண்காணித்து, அதன் உண்மைநிலையை விளக்க உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விற்பனையில் தட்டுப்பாடு இல்லை என அரசு விளக்கமளித்துள்ளது.
News March 13, 2026
சஞ்சுவை புறக்கணித்தாரா கில்?

சஞ்சு அணியில் இடம்பெற்றதால்தான், T20 அணியில் கில்லிற்கு இடம் கிடைக்கவில்லை என்ற கருத்துள்ளது. T20I WC வென்ற இந்திய அணியை பாராட்டி கில் வெளியிட்ட போஸ்ட்டில், சஞ்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு விஷயங்களையும் முடிச்சு போட்ட நெட்டிசன்கள் கில் வன்மத்தை கக்கிவிட்டார் என விமர்சிக்கின்றனர். ஆனால், கில் பதிவிட்ட போட்டோ எடுக்கப்பட்ட Angle-ல், சஞ்சு மறைந்துவிட்டார் என்பதே உண்மை.
News March 13, 2026
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இழுபறியா?

மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே NDA கூட்டணியில் இணைவோம் என்று என்.ஆர்.காங்., விடாப்பிடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகிறார். முன்னதாக, புதுவை அரசு சார்பில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


