News December 28, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 131 ▶குறள்: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ▶பொருள்: ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
Similar News
News March 5, 2026
ராசி பலன்கள் (06.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 5, 2026
லோனில் பைக் / கார் வாங்குபவர்களுக்கு நற்செய்தி!

லோனில் பைக் அல்லது கார் வாங்கும்போது, RC புக்கில் கடன் கொடுத்த வங்கி/ நிதி நிறுவத்தின் பெயர் இருக்கும். லோன் கட்டி முடித்த பின்னரே இதை மாற்ற முடியும். இதற்கு நீங்கள் வங்கிக்கும், RTO-க்கும் அலைய வேண்டிய நிலை இருந்தது. இனி அதற்கு அவசியமில்லை. லோன் செலுத்தி முடித்த உடனே, ஆன்லைனில் தானாகவே RC-ல் அப்டேட் செய்யப்படும். இது தற்போது சோதனை முறையில் உள்ளது. விரைவில் விரிவுப்படுத்தப்படும்.
News March 5, 2026
டைம் ஓவர்.. பாதியிலேயே கிளம்பிய ரயில் டிரைவர்

பிஹாரில் ஒரு லோகோ பைலட் தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக ரயிலை பாதியிலேயே நிறுத்திச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மால்டா-சிலிகுரி சென்ற ரயில் நேற்று மதியம் தாக்குர்கஞ்ச் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது லோகோ பைலட் தனது 9 மணி நேர ஷிப்ட் முடிந்துவிட்டதாக கூறி ரயிலை மேலும் இயக்க மறுத்துவிட்டார். இதனால் பயணிகள் 3 மணி நேரம் சிக்கித் தவித்தனர். மேலும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


