News April 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 321 ▶குறள்: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். ▶பொருள்: எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
Similar News
News December 27, 2025
காலை 11 மணிக்கு கூடுகிறது நாதக பொதுக்குழு!

சீமான் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் ஆண்டு கணக்கு, 2026 தேர்தல் வேட்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அதேபோல், கட்சியிலிருந்து அண்மை காலமாக பல முக்கிய முகங்கள் வெளியேறிய நிலையில், அவர்கள் வகித்த பதவிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் சீமான் இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 27, 2025
புதிய 500 ரூபாய் நோட்டு.. வந்தது வார்னிங்

ATM மெஷினுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போலி 500 ரூபாய் நோட்டுகளை தயாரித்த மளிகை கடைக்காரர் ராஜேந்திரன் போலீசில் சிக்கியுள்ளார். திருப்பூர், ஆண்டிபாளையத்தில் தனியார் வங்கி ATM-ல் 12 நோட்டுகளை(₹500) ஒருவர் டெபாசிட் செய்துள்ளார். இதை கண்டுபிடித்த மேலாளர் போலீசிடம் புகார் அளிக்க விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ATM மெஷினையே ஏமாற்றும் வகையில் போலி ₹500 நோட்டுகள் இருப்பதால் மக்கள் உஷாராக இருங்க.
News December 27, 2025
குளிர்காலத்துக்கான ஒரு சூப்பர் ஃபுட் இது!

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், சோர்வு ஆகியவற்றை தடுக்க பூசணி விதைகள் ஒரு சூப்பர் ஃபுட் என நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், *இதில் உள்ள ஜிங்க், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *உடலுக்கு ஆற்றலை தருகிறது *மெக்னீசியம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது *சரும வறட்சியை தடுக்கிறது *நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது.


