News April 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 320 ▶குறள்: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். ▶பொருள்: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
Similar News
News April 28, 2025
எந்த பாட்டில் முதலில் நிரம்பும்?

நிறைய நியூஸ் படிச்சி கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணுறீங்களா..? வாங்க ஒரு சின்ன கேம் ஆடுவோம். மேலே உள்ள படத்தில், ஒரு குழாயில் இணைக்கப்பட்ட 7 பாட்டில்களை காணலாம். அதை கவனமாகப் பார்த்து, முதலில் எந்த பாட்டில் நிரம்பும் என சொல்லுங்கள். கொஞ்சம் லாஜிக்குடன் யோசித்தால், உங்களுக்கு பதில் கிடைக்கும். உங்க ஃப்ரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணி கேட்டுப்பாருங்க!
News April 28, 2025
PTR-க்கு கூடுதல் இலாகா ஒதுக்காதது ஏன்?

அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் இலாகா ஒதுக்காதது பேசுபொருளாகியுள்ளது. பிடிஆரின் நேர்மையான கருத்துகள், அரசியல் மற்றும் உட்கட்சிக்குள் விருப்பமில்லாத பரபரப்பை உருவாக்குவதாக கட்சி தலைமை கருதுகிறது. இது கட்சி நிர்வாகத்திற்கு சற்று சவாலாக இருப்பதால், அவருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
News April 28, 2025
BREAKING: பொங்கலுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000

பொங்கலுக்கு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 9 முக்கிய அறிவிப்புகளை ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000-ஆக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.