News April 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 318 ▶குறள்: தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். ▶பொருள்: பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.
Similar News
News November 28, 2025
பாளை சிறையில் போக்சோ கைதி உயிரிழப்பு

மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52). இவர் கடந்த ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 22ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
டிரம்ப் செயலால் 19 நாடுகளுக்கு வந்த புதிய சிக்கல்

வெள்ளை மாளிகை அருகே நடந்த <<18400484>>துப்பாக்கிச்சூட்டை<<>> தொடர்ந்து, ஆப்கானியர்களின் <<18401691>>குடியேற்றத்துக்கு <<>>டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பர்மா, ஈரான், ஹைட்டி, சோமாலியா, சூடான், யேமன், கியூபா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து வந்தவர்களின் கிரீன் கார்டுகளை முழுமையாக பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, காயமடைந்த வீரர்களில் ஒருவர் உயிரிழந்ததாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
News November 28, 2025
WPL: அதிக விலைக்கு ஏலம் போன டாப் 7 வீராங்கனைகள்!

நேற்று நடைபெற்று முடிந்த WPL ஏலத்தில் அணிகள் பணத்தை கொட்டி வீராங்கனைகளை வாங்கியுள்ளன. ₹50 லட்சம் அடிப்படை விலை கொண்ட ஒரு வீராங்கனை ₹3.20 கோடிக்கு ஏலம் போனது தான் இன்று ஹாட்டாபிக். இது மட்டுமின்றி, இந்த ஏலத்தின் டாப் 7 ஒப்பந்தங்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். WPL தொடரில் உங்களின் ஃபேவரிட் வீராங்கனை யார்?


