News April 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 314 ▶குறள்: இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். ▶பொருள்: நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
Similar News
News November 25, 2025
திருச்சி: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

சோமரசம்பேட்டையை அடுத்த கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் டேனியல் ஸ்டீபன் (32). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்த இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். டேனியல் ஸ்டீபன் கடந்த சில நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 25, 2025
அறிவாலயத்தில் பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி

நவ.27-ல் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் DCM உதயநிதி. இந்நிலையில், திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதல்முறையாக உதயநிதி பிறந்தநாள் கொண்டாடவுள்ளாராம். அன்றைய தினம் சுமார் 50,000 தொண்டர்கள் நேரடியாக உதயநிதிக்கு வாழ்த்து கூறவுள்ளனராம். கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் அறிவாலயத்தில் பிறந்தநாள் கொண்டாடவுள்ள உதயநிதியை, 2026 தேர்தலில் முக்கிய முகமாக மாற்ற திமுக முயற்சிக்கும் என்கின்றனர்.
News November 25, 2025
தமிழகத்தில் ஜூனியர் உலகக் கோப்பை: அனுமதி இலவசம்

ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டித் தொடர், நவ.28 – டிச.10 வரை சென்னை, மதுரையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 24 அணிகள், 6 பிரிவுகளில் விளையாடவுள்ளன. இப்போட்டிகளை காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை <


