News April 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 309 ▶குறள்: இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை ▶பொருள்: எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.
Similar News
News December 2, 2025
விஜய்க்கு அறிவுரை சொல்லமாட்டேன்: கமல்

அனுபவமே சிறந்த பாடத்தை கற்றுக்கொடுக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியல் பற்றி விஜய்க்கு அறிவுரை சொல்வீர்களா என்ற கேள்விக்கு, அறிவுரை சொல்லும் இடத்தில் தான் இல்லை என்றும், தனது தம்பிக்கு (விஜய்) அறிவுரை வழங்குவதற்கு இதுசரியான தருணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அனுபவத்திற்கு சார்பு கிடையாது என்பதால், அது உங்களுக்கு தேவையானதை கற்றுக்கொடுக்கும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
News December 2, 2025
கிங் கோலியின் சாதனை.. வீறுநடை போடும் இந்தியா

ODI கிரிக்கெட்டில் சேஸ் மாஸ்டரான விராட் கோலி கடைசியாக அடித்த 17 சதங்களில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. 17 போட்டிகளில் இந்தியா 15-ல் வெற்றி, இரு போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளன. மேலும், சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதிலும் நம்பர் 1 வீரராக கோலி உள்ளார். அவர் 82 சதங்கள் விளாசியுள்ள நிலையில், அதில் இந்தியா 59 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.
News December 2, 2025
ரசிகர்களை என்னை கொண்டாட வேண்டாம்: SK

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, தனது ரசிகர்களிடம் தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார். ரசிகர்கள் தன்னை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்திய அவர், பெற்றோர்களை கொண்டாடினால் போதும் எனவும் கூறியுள்ளார். ரசிகர்கள் தன்னிடம் குடும்பமாக பழகவேண்டும் என்பதே ஆசை என்றும், அதனால்தான் அனைவரையும் சகோதர, சகோதரிகள் என அழைத்து வருவதாகவும் பேசியுள்ளார்.


