News April 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 309 ▶குறள்: உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். ▶பொருள்: உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
Similar News
News December 3, 2025
எடையை குறைக்க பெஸ்ட் வாங்கிங் முறை இதுதான்!

உடல் எடையை குறைக்க தொடர்ந்து வாக்கிங் சென்றும் பலன் கிடைக்கவில்லை. அப்போ ட்ரெண்டில் இருக்கும் 5-4-3-2-1 நடைபயிற்சி முறை உங்களுக்கு உதவலாம். இந்த முறைப்படி 5 நிமிடங்கள் (வேகமாக நடப்பது), 4 நிமிடங்கள் (வேகத்தை சற்று குறைக்க வேண்டும்), 3 நிமிடங்கள் (வேகத்தை மேலும் குறைத்து வேண்டும்), 2 நிமிடங்கள் (மிகவும் மெதுவாக நடக்கவும்),1 நிமிடங்கள் (நிதானமாக நடக்கவும்) என படிப்படியாக வேகத்தை குறைக்க வேண்டும்.
News December 3, 2025
BJP வேட்பாளராக களமிறங்கும் சோனியா காந்தி

கேரளாவின், மூணாறு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் BJP வேட்பாளர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். ஏனெனில் அவரது பெயர் சோனியா காந்தி. உள்ளூர் காங்கிரஸ் தலைவரான இவரது தந்தை, சோனியா காந்தி மீதான அன்பு, மரியாதையின் வெளிப்பாடாக அவரது பெயரை மகளுக்கு சூட்டியுள்ளார். எதிர்காலத்தில் சோனியா காந்தியின் அரசியல் பயணம் பாஜகவை நோக்கி இருந்துள்ளது. இவர் வெற்றி பெறுவாரா என்பது டிச.13-ம் தேதி தெரியவரும்.
News December 3, 2025
டிசம்பர் 3: வரலாற்றில் இன்று

*1884– இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள். *1971-இந்தியாவின் விமானப்படை தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், INDO-PAK போர் ஆரம்பித்தது. *1984–போபால், நச்சு வாயு கசிவு விபத்தில் 3,800 மக்கள் உயிரிழப்பு. *1979–ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் மறைந்த நாள். *1998–கவிஞர் முடியரசன் மறைந்த நாள்.


