News April 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 308 ▶குறள்: இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. ▶பொருள்: தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

Similar News

News January 14, 2026

WPL வரலாற்றில் முதல் சம்பவம்!

image

மகளிர் பிரீமியர் லீக்கில் ரிட்டயர்டு அவுட் ஆன முதல் வீராங்கனையாக GG வீராங்கனை ஆயுஷ் சோனி உருவெடுத்துள்ளார். நேற்றைய MI-க்கு எதிரான போட்டியில் 6-வதாக களமிறங்கிய அவர், 14 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே அடித்தார். பெரிய ஷாட்களை அடிக்க முடியாததால் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டு பார்தி ஃபுல்மாலி களமிறக்கப்பட்டார். ஃபுல்மாலி 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 36 ரன்களை எடுத்தார்.

News January 14, 2026

RCB வீரரின் அணியில் கோலிக்கு இடமில்லை!

image

RCB விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, தனது ஃபேவரைட் ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால், அதில் கோலி இடம்பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜிதேஷ் சர்மாவின் அணியின் தோனி கேப்டனாக உள்ளார். அதேபோல் ரோஹித், கில்கிறிஸ்ட், சூர்யகுமார் யாதவ், ஜேக்ஸ் காலிஸ், டிவில்லியர்ஸ், பும்ரா, ஹேசல்வுட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News January 14, 2026

அதல பாதாளத்தில் ஈரானின் ரியால் மதிப்பு

image

<<18836892>>ஈரானில் அரசுக்கு<<>> எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. கள்ளச்சந்தையில் ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 1.43 மில்லியன் ஈரான் ரியாலாகவும், அதிகாரப்பூர்வ மதிப்பு 42,000 ஈரான் ரியாலாகவும் உள்ளது. அதுவே உங்களிடம் ₹21,48,350 இருந்தால், தற்போது ஈரான் மதிப்பில் 100 கோடிக்கு சொந்தக்காரர் என்று அர்த்தமாகும்.

error: Content is protected !!