News April 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை.
▶குறள் எண்: 304 ▶குறள்:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
▶பொருள்: சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.
Similar News
News April 19, 2025
IPL: PBKSக்கு 96 ரன்கள் இலக்கு

நடப்பு ஐபிஎல் போட்டியில் PBKS அணிக்கு RCB அணி 96 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த RCB அணியின், தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிம் டேவிட் மட்டும் அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்தார். PBKS பவுலர்களின் அதிரடியால், RCB 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே குவித்தது.
News April 19, 2025
1 கிலோ எலுமிச்சை ரூ.120

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பலரும் கூல் டிரிங்ஸ், பழச்சாறு, எலுமிச்சை சாறு அருந்துகின்றனர். இதனால் எலுமிச்சை தேவை அதிகரித்துள்ளது. ஆனால் போதிய வரத்து இல்லை. இதனால் சென்னையில் எலுமிச்சை விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ எலுமிச்சை ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இதனால் எலுமிச்சை வாங்க வந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உங்கள் ஊரில் எலுமிச்சை விலை என்ன?
News April 19, 2025
தினம் ஒரு வாழைப்பழம்

நமது வயிற்றுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருப்பது நார்ச்சத்து (Fiber). அது வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கிறது (3 கிராம்). ஆகையால், தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது வயிற்றுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு ஆரம்ப காலங்களில் தினம் ஒரு வாழைப்பழத்தை கொடுத்து வளர்த்தால், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்குமாம்.