News April 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 225 ▶குறள்: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ▶பொருள்: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

Similar News

News November 16, 2025

பண்ணையாரை நாங்க மிரட்ட முடியுமா? ரகுபதி

image

பாஜகவினரை, திமுகவினர் மிரட்டுவதாக நயினார் நாகேந்திரன் பேட்டி ஒன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அமைச்சர் ரகுபதி, ‘நயினார் நாகேந்திரன் ஒரு பண்ணையார்! அவரை போய் நாங்க மிரட்ட முடியுமா?’ என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனும் சாந்தமானவர் தான் என்று கூறிய அமைச்சர், திமுக மிரட்டாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

News November 16, 2025

சமூக நீதியின் சாபமே திமுக: அன்புமணி

image

சமூகநீதியின் சாபமே தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் தான் என திமுகவை அன்புமணி விமர்சித்துள்ளார். திமுகவினரின் கைகளில் அதிகாரம் கிடைத்தால், சமூகநீதியை காலில் போட்டு நசுக்குவார்கள், அவர்களின் சமூக அநீதிகளை கண்டு அக்கட்சியில் உள்ள வன்னியர்களே கொந்தளித்துள்ளதாகவும் சாடியுள்ளார். திமுக அரசின் சமூகநீதி நம்பிக்கை துரோகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாமகவினருக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

News November 16, 2025

புயல் சின்னம்: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், இன்று விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரத்திலும், நாளை மறுநாள் தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

error: Content is protected !!