News April 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 224 ▶குறள்: இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. ▶பொருள்: ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
Similar News
News April 3, 2025
மே மாதம் வரலாறு படைக்க போகும் இந்தியர்

இந்தியாவின் சுபன்ஷு சுக்லா, வரும் மே மாதம் நாசா உதவியின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ISS) பயணிக்க உள்ளார். தனியாரின் Axiom Mission 4 திட்டத்தின் ஒரு பகுதியாக, 4 வீரர்களுடன் அவர் பயணிக்க உள்ளார். இதன்மூலம், ISS செல்லும் முதல் இந்தியர் என்ற பெயரை அவர் பெற உள்ளார். அதேபோல், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திலும் சுக்லா இடம்பெற்றுள்ளார்.
News April 3, 2025
கோவா அணிக்கு மாறியது ஏன்? ஜெய்ஸ்வால் விளக்கம்

தன்னை தேடி வந்த கேப்டன் பதவியை எடுத்துக் கொண்டதாக, ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவை எடுப்பது சவாலாக இருந்ததாகவும், தன்னுடைய இன்றைய நிலைக்கு மும்பை அணி தான் காரணம் எனவும், அதற்காக வாழ்நாள் முழுவதும் அந்த அணிக்கு கடைமைபட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், தற்போது கோவா அணிக்கு மாறியுள்ளார்.
News April 3, 2025
சாவை தானே தேடிச் சென்றவர் கைது

அந்தமான் நிகோபார் தீவுகளில் வசிக்கும் சென்டினல் பழங்குடிகளைச் சந்திக்க சென்ற USA-வின் மைகாலியோவை போலீசார் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்று, பழங்குடிகளை பார்க்க அவர் முற்பட்டிருக்கிறார். இருப்பினும், பழங்குடிகள் அவரை பார்க்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார். வெளியாட்கள் வருவதை பார்த்தவுடன் கொல்வதுதான் அப்பழங்குடிகளின் வழக்கம்.